PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய நாளை கடைசி நாள்!

பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய நாளை (31.08.2022) கடைசி நாள். அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN Credit card பெற வேண்டும். இந்த KISAN Credit card யை பெற இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் 4% வட்டி வீதத்தில் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்ய நாளை (31.08.2022) கடைசி நாள்.