அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து மாற்றம்:

நெடுஞ்சாலைத்துறை சார்பாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக 07-06-2023 புதன் கிழமை காலை 6 மணி முதல் சாலை பணி முடியும் வரை திரெபதி அம்மன் கோயில் முதல் வட ஒத்தவாடைத் தெரு வரை உள்ள சாலை மூடப்படுகிறது.

தண்டராம்பட்டு, மணலூர்பேட்டை சாலை வழியாக வரும் வாகனங்கள் கல்நகர், ஆடுதொட்டி தெரு, காந்திநகர் பைபாஸ் சாலை வழியாக பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

பே கோபுரத்தெரு வழியாக நகரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர்  சிலையிலிருந்து கல்நகர், ஆடுதொட்டி தெரு, காந்திநகர் பைபாஸ் சாலை வழியாக பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

தேரடி தெருவில் இருந்து நகருக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் | காந்திசிலை, பூதநாராயணபெருமாள்கோயில், சின்னகடைத்தெரு வழியாக செல்ல வேண்டும்.

செங்கம் சாலையில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கிரிவலப்பாதை சந்திப்பில் இருந்து கிரிவலப்பாதை வழியாக செல்ல வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.