திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை முறைப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று 23.06.2023 முன்னோடி விவசாயிகள், தனியார் அறுவடை இயந்திரம் உரிமையாளர்கள், வேளாண்மை மற்றும் பிற துறை அலுவலர்கள் உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.