திருப்பதி தேவஸ்தானத்தில் வரலாறு காணாத வசூல்!

திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 31 நாட்களில் ( ஒரு மாதத்தில்) ஏழுமலையான் கோவில் உண்டியலில் 139 கோடியே 45 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர். இதன் மூலம் தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரே மாதத்தில் ஏழுமலையான் உண்டியல் அதிக காணிக்கையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.