திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கான முடிவுகள் காலை 10 மணிக்கு தெரியவரும். நகராட்சிக்கான முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரியும்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியிலும், ஆரணி நகராட்சிக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், செய்யாறு நகராட்சிக்கு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.

அதேபோல செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு, செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளுக்கு, திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. கண்ணமங்கலம், போளூர், களம்பூர் பேரூராட்சிகளுக்கு போளூர் ரேணுகாம்பாள் கலைக்கல்லூரியிலும், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் பேரூராட்சிகளுக்கு சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.