திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா வரும் ஜன – 7 ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் வரும் (07.01.2024 ) சனிக்கிழமை காலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து தினசரி காலை, மாலை விநாயகர் சந்திரசேகரர், அம்பாளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி மாடவீதியுலா நடைபெற உள்ளது. 10-ம் நாளான தை மாதம் முதல் நாள் (15.01.2024) திங்கட்கிழமை “தாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு” பெறுகிறது.