திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ நேற்று இரவு 7. 30 மணி நிலவரப்படி 3, 062 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில்‌ முதல்‌ டோஸ்‌ தடுப்பூசி 11, 84, 666 பேருக்கும்‌, இரண்டாவது டோஸ்‌ தடுப்பூசி 8, 92, 273 பேருக்கும்‌, ஒட்டுமொத்தமாக இரண்டு தடுப்பூசியும்‌ சேர்த்து 20, 76, 939 பேருக்கும்‌ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.