நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு!

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-02-2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.