திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 1333 பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சுற்றி அதிக எண்ணிக்கையில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி “உலக சாதனை” படைத்தமைக்காக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடெமி மற்றும் தமிழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நான்கு அமைப்புகள் சார்பில் சாதனையை அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங் ஆகியோரிடம் நேற்று (03.02.2023) வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிபாளர் மரு. கி.கார்த்திகேயன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.