சிங்கம் ,மான் உலாவவிடத்தில் நேரில் பார்க்கலாம்… அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நவீன வசதி!

வண்டலூர் என்பது இந்தியாவின் பெருநகரமான சென்னையில் தெற்கே அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் அமைந்துள்ளது.

இந்த உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரம் 2023 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையாளர்களுக்கான சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடப் பகுதிக்குச் செல்வதற்கான வசதியையும், QR குறியீட்டு நுழைவுச்சீட்டு வசதியையும் மற்றும் பூங்கா வனவிலங்கு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கையும் திறந்து வைத்தார்.

பூங்காவில் ஏசி பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம் மான்களை பார்வையிடலாம் ஒரு பஸ்ஸில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.